Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு » ஜாக்டோ – ஜியோ கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஜாக்டோ – ஜியோ கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

stalin press meetசென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். எழிலகம் வளாகத்தில் நேற்று முதல் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த 7 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது. இருப்பினும் தமிழக அரசு இதுவரை அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள ஆவின் வளாகம் முன்பு நேற்று காலை 10 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக ஜாக்டோ – ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஜாக்டோ – ஜியோ கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எடப்பாடி தலைமையிலான ஆட்சி, அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கையை நிறைவேற்றாது என்று குற்றம் சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

மேலும் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி அதிமுக அரசு கவலைப்படுவதில்லை என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார். ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் தான் அதிமுக அரசு கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com