Friday , 18 August 2017
Home » இந்தியா » ஜனனி சுரக்ஷா யோஜாவின் கீழ் முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 பரிசு

ஜனனி சுரக்ஷா யோஜாவின் கீழ் முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 பரிசு

downloadமத்திய அமைச்சரவை இன்று பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனனி சுரக்ஷா யோஜாவின் கீழ் முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 பரிசு வழங்கப்படும்.இதே போன்று, பிரசவித்த மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தொகை 3 தவணைகளாக பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள பெண்களுக்கும் இந்த உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அசாமில் இந்திய வேளாண் கழகம் அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 587 ஏக்கர் நிலம் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com