Thursday , 18 October 2018
Home » இந்தியா » சொந்த ஊருக்கு திரும்பியது போல் உள்ளது: பிராவோ

சொந்த ஊருக்கு திரும்பியது போல் உள்ளது: பிராவோ

சென்னை அடையாறில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து தனியார் சிறு நிதி வங்கி ”எல்லோ ஆர்மி” என்ற புதிய சேமிப்பு கணக்கை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை அணி வீரர் முரளி விஜய், சென்னை அணிக்காக மீண்டும்  களமிறங்குவது பழைய நினைவுகளை நினைவு படுத்துவதாக கூறினார். ஐ.பி.எல் தொடரில் விளையாடும் போது கடுமையான போட்டி நிலவும். சி.எஸ்.கே அணிக்கு விளையாட வேண்டும் என்ற கனவு மீண்டும் நடந்துள்ளது.இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் எனவும் கூறினார்.வெளிநாட்டு வீரர்களை தாண்டி உள்ளூர் வீரர்கள் தங்கள் திறமையை இந்த ஐ.பி.எல் தொடரில் காட்ட வேண்டும் எனக் கூறினார். இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிராவோ, “ சி.எஸ்.கே அணிக்கு மீண்டும் திரும்பியது சொந்த ஊருக்கு திரும்பியது போல் உள்ளது” எனக் கூறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com