Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சேலத்தில் ரவுடியை வெட்டி கொன்ற வழக்கில், எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » சேலம் » சேலத்தில் ரவுடியை வெட்டி கொன்ற வழக்கில், எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் ரவுடியை வெட்டி கொன்ற வழக்கில், எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை

vlcsnap-2018-07-10-10h46m39s506சேலத்தில் ரவுடியை வெட்டி கொன்ற வழக்கில், எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன். பிரபல ரவுடியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலருக்கும் நியாய விலை கடையில் அரிசி வழங்கி கடத்தல் செய்வதில் மோதல் இருந்து வந்துள்ளது. இதையறிந்த சேலம் மாநகர காவல்துறையினர் இரு தரப்பினர்களை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரவுடி மோகன் தனது வீட்டிலிருந்து பழைய பேருந்து நிலையம் வந்துவ இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது குகைபாலம் என்ற பகுதியில் மோகனை ரவுடி சிலர் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தொடர்பாக சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் பிரபல ரவுடிகளான முரளி, கார்த்தி, மூர்த்தி, சண்முகபாண்டியன், ஆறுமூகம், வெங்கடேஷ், செல்வன், மேட்டூர் ரகு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில வழக்கை விசாரித்த நீதிபதி எழில் கைது செய்யப்பட்ட முரளி, கார்த்தி, மூர்த்தி, சண்முகபாண்டியன், ஆறுமூகம், வெங்கடேஷ், செல்வன், மேட்டூர் ரகு ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com