Monday , 20 November 2017
Home » இந்தியா » சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும் ; உச்சநீதிமன்றம் …

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும் ; உச்சநீதிமன்றம் …

Supreme_Court_of_India_-_Central_Wingசேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் 6 வார காலத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இந்த வழக்கை தொடர்ந்தனர்.  2013-ஆம் ஆண்டிலிருந்து இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

மேலும், அதிக கால அவகாசம் அளித்தும் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்தநிலையில் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  6 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com