Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
செல்போன், ஏலக்காய் வரி குறைப்பு! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » முக்கிய செய்திகள்: » செல்போன், ஏலக்காய் வரி குறைப்பு!

செல்போன், ஏலக்காய் வரி குறைப்பு!

mobileசெல்போன், ஏலக்காய் ஆகியவற்றுக்கான வரி குறைப்பு, ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்ற அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 25-ந் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு வரிச்சலுகைகளை அவர் அறிவித்தார். அவற்றில் நூலுக்கு பசையிடுதல், ஏலக்காய், செல்போன் ஆகியவற்றுக்கான வரிகள் குறைக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த நிலையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் அரசிதழ் ஒன்றை வெளியிட்டார். அதில் நெய்தலுக்கு முன்பாக நூலுக்கு பசையிடுவது தொடர்பான ஒப்பந்த பணிகளுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு ஏலக்காய் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்ற தெரிவித்தார்.
மேலும், கைபேசிகள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, 14 புள்ளி 5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு, ஆகியவை வரும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றன என்று அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com