Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடு » சென்னை மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்!

staசென்னை மாநகராட்சி டெண்டர்களில் 740 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ள ஊழலுக்குக் காரணமான அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, சென்னை மாநகராட்சியில் ஊழல் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். சில ஒப்பந்தங்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் அமைப்பை கூண்டோடு கலைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றது அமைச்சரின் ஊழல்களை பட்டுக்கம்பளம் போர்த்தி மறைக்கவா எனவும் வினவியுள்ள மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி டெண்டர்களில் 740 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ள ஊழலுக்குக் காரணமான அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com