சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏ.பி.சஹி பதவியேற்பைத் தொடர்ந்து ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

ஏ.பி.சாஹி என குறிப்பிடப்படும் அமரேஷ்வர் பிரதாப் சஹி, 1985 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 2004ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2018ஆம் ஆண்டு நவம்பரில் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்றுக் கொண்டார்