Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்தது கன மழை

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்தது கன மழை

rainசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் சென்னை, புதுச்சேரி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சென்னை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்டரல், புரசைவாக்கம், தேனாம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கிண்டி, ஆவடி, குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. திடீரென பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com