Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சென்னையில் உரிமம்பெற தகுதி பெறாத வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » தமிழ்நாடு » சென்னையில் உரிமம்பெற தகுதி பெறாத வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் உரிமம்பெற தகுதி பெறாத வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

9b25e900-f461-4912-815e-ede9c4dddcd6_S_secvpfசென்னையில் உரிமம்பெற தகுதி பெறாத வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  பள்ளி சிறுவர்களும் மோட்டார் சைக்கிள்களை வேகமாகவும், அபாயகரமாகவும் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இது அவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இதனை உணர்த்தும் விதமாக வியாசர்பாடியில் நேற்று ஒரு விபத்து நடந்தது. வியாசர்பாடியை சேர்ந்த ஜீவா என்பவருடைய மகன் யுவராஜ் (வயது 15). மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (15), பிரேம்நாத் (15) ஆகியோரும் யுவராஜின் வகுப்பு நண்பர்கள்.

இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெரு வழியாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த மாநகராட்சி ஒப்பந்த லாரி ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். யுவராஜ், வசந்தகுமார் இருவரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பிரேம்நாத் படுகாயம் அடைந்தார்.

கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேம்நாத்தை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 2 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் கொளத்தூரை சேர்ந்த சங்கர் (24) என்பவரை கைது செய்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com