Thursday , 16 August 2018
Home » மாவட்டம் » திருவண்ணாமலை » செங்கம் அருகே 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை

செங்கம் அருகே 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை

செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சேகர் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அத்து மீறி தனது நிலத்தை அரசு நிலம் கையகப்படுத்தியதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் விவசாய குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல். சென்னை முதல் சேலம் வரை 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சேகர் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் வீடு ஆகியவை அரசு கையகப்படுத்தியதன் மூலமாக தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எண்ணி வேதனை அடைந்த விவசாயி சேகர் வேதனை தாங்கமுடியாமல் கடந்த 29ஆம் தேதி தனது விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
தனக்குப் பின்னால் தனது குடும்பத்தின் நிலையை எண்ணி கடும் மன உளைச்சலில் இருந்த சேகர் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு இந்த அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார.;
மேலும் விவசாய மக்களின் வாழ்வாதாரம் அழிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தங்களுடைய போராட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையை எண்ணி பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.இதனை அறிந்த கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம் வி சேகர் இறந்த விவசாயி சேகர் வீட்டிற்கு நேரில் சென்று துக்கத்தில் ஆழ்ந்திருந்த விவசாயி குடும்பத்திற்கு ஆறுதல் கூறியும் இறந்த விவசாயிக்கு தமிழக அரசு மூலம் ரூபாய் 1 கோடி நிவாரணம் வழங்கியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்த 8 வழி பசுமை சாலை விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சாலை அமைப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார. மேலும் தனது கட்சி சார்பில் இறந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்அப்போது உடனிருந்த கோகுல மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் செங்கம் கு. ராஜாராம் மாநில மகளிரணி தலைவி காந்திமதி மாநில அமைப்பு செயலாளர் ராஜாங்கம் மாநிலக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் மாவட்ட பொருளாளர் சிவகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பாலாஜி முருகன் ஜெயராமன் கண்ணாக்குருக்கை முருகன் திருப்பூர் அருள் ரைஸ் மில் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com