Thursday , 18 October 2018
Home » சிறப்புச் செய்திகள் » சுற்றுசூழலை பாதிக்கும் அடுத்த திட்டத்திற்கு அனுமதியா ?

சுற்றுசூழலை பாதிக்கும் அடுத்த திட்டத்திற்கு அனுமதியா ?

5தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சுழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரையை ஏற்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதாகத் தெரிகிறது.

இத்திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படாது எனக்கூறப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக பிரச்சனையிருந்தால், 30 நாட்களுக்குள் பசுமை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com