Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » நாகப்பட்டினம் » சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

vlcsnap-2018-07-24-11h09m25s156நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவர் அ.தி.மு.க. ஒன்றிய மாணவரணி செயலாளராக உள்ளார்., பிரபல காண்டட்ராக்டர் மற்றும் தொழிலதிபரான இவர் இன்று காலை தனது காரில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிடாரி வடக்கு வீதி ;பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ரமேஷ்பாபு வந்த காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். அப்போது காரில் இருந்து இறங்கி தப்ப முயன்ற ரமேஷ்பாபுவை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தி இறந்த உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொழில்; போட்டியில் செய்யப்பட்டதா இலலை வேறு ஏதாவது ரௌடி கும்பலை சேர்ந்தவர்கள் செய்திருப்பார்களா என்ற கோணத்தில் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com