Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » சிறப்புச் செய்திகள் » சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

download (4)லட்சத்தீவு, கர்நாடகம் அருகே உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த 2 தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஆந்திராவில் கடப்பா, அனந்தபுரம், கர்னூல், விசாகப்பட்டினம், நெல்லூர் ஓங்கோல், சித்தூர், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டியது.

தெலுங்கானாவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது. குறிப்பாக கரீம்நகர், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

மழையில் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 7 பேர் பலியானார்கள். அனந்தபுரத்தில் வீடு இடிந்து மல்லம்மாள், அவரது மகள் திவ்யாசுரேகா ஆகியோர் பலியானார்கள். இதே மாவட்டத்தில் கவுஸ்பீ என்ற பெண்ணும் பலியானார்.

வரங்கலில் கணவன் மனைவியான ரமேஷ், ராஜம்மாள் மின்சாரம் தாக்கி இறந்தனர். நிஜாமாபாத்தில் யமுனாபாய் என்ற பெண்ணும், மெகபூப் நகரில் சக்கிரிபாய் என்பவரும் இறந்து போனார்கள்.

மழையில் உயிர் இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டு உள்ளார்.

திருப்பதியிலும் நேற்று பலத்த மழை கொட்டியது. இதனால் ஏழுமலையான் கோவிலை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கியது.

20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் திருப்பதியில் பதட்டம் நிலவுதால் ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்தது. வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குறைவாக காணப்பட்ட தினம் நேற்றுதான் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

அதிலும் பாத யாத்திரையாக விரல் விட்டு எண்ணும் வகையிலேயே பக்தர்கள் வந்திருந்தனர். திருப்பதி கோவிலுக்கு 40 சதவீத பக்தர்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறார்கள். பஸ்கள் ஓடாததால் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com