Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » சிலைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல்செய்ய உத்தரவு!

சிலைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல்செய்ய உத்தரவு!

chennai high courtசிலை வாங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தொழிலதிபர் ரன்வீர் ஷா, கிரண் ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ம் தேதி சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், கூடுதல் துணை ஆணையர் அசோக் நடராஜ், காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரம் மற்றும் காவல்படையினர் சோதனை நடத்தினர். அப்போது ரன்வீர்ஷாவின் வீடு கோவிலை போல காட்சி அளித்தது. வீடு முழுவதும் பல்வேறு அறைகளில் கற்சிலைகளும், மெட்டல் சிலைகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அசைக்க முடியாத அளவிலான பிரமாண்டமான கல் தூண்களும் இருந்தன. இவைகளை 5 லாரிகளில் கிரேன் மூலம் ஏற்றப்பட்ட இந்த சிலைகள் அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்படும் தொழிலதிபர் ரன்வீர் ஷாவ் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ரன்வீர் ஷாவின் மற்றும் அவரது நண்பர் கிரண் ராவ் இருவரும் சிலை கடத்தல் வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை என்றும், பாரம்பரிய பொருட்கள், சிற்பங்கள் மீதான ஆர்வத்தால் சிலைகளை சேகரித்தோம் எனக்கூறி சென்னை உயர்நீமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சிலை கடத்தல் சிறப்பு அமர்வு, 1993-ல் வாங்கிய சிலைகளுக்கு 2018-ல் சான்று பெற்றது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், சிலை வாங்கியதற்கான ஆவணங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்தது. தொழிலதிபர் ரன்வீர் ஷாவ் மற்றும் அவர் நண்பர் கிரண் ராவ் இருவரும் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்தால் 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com