Friday , 16 November 2018
Home » இந்தியா » சபரிமலை பாதுகாப்பு குழு சார்பில், ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம்

சபரிமலை பாதுகாப்பு குழு சார்பில், ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம்

2சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது மகளிரும் தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல ஊர்களிலும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி பத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து தரப்பு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் துலாம் மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட நிலையில், சபரிமலைக்கு செல்லும் முக்கிய வழிகளில் எல்லாம் போராட்டங்கள் நடைபெற்றன. சபரிமலை கோவில் உள்ள மாவட்டத்தின் தலைநகரான பத்தனம் திட்டா, சபரிமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலக்கல், அதனை அடுத்துள்ள எரிமேலி, கோவிலுக்கு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பம்பை மற்றும் சபரிமலை சன்னிதானத்தின் அடிவாரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சபரிமலை வட்டாரத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்படுவதாக பத்தனாம் திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு அறிவித்துள்ளார். தொடரும் போராட்டங்களை அடுத்து சபரிமலையை சுற்றி 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த தடை உத்தரவு வருகிற 22-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com