Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » சபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்!

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்!

11சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதின்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபடுவதற்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு சில தரப்பினர்களிடமிருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் எழுந்தன. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று கேரள அரசு தெரிவித்தது.. இந்நிலையில், தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com