Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடு » சபரிமலையில் 2 பெண்கள் நுழைந்த விவகாரம் தமிழகம் முழுவதும் வழுக்கிறது எதிர்ப்பு!!

சபரிமலையில் 2 பெண்கள் நுழைந்த விவகாரம் தமிழகம் முழுவதும் வழுக்கிறது எதிர்ப்பு!!

3சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
01. கேரளாவிலுள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 பெண்கள், கோவிலின் பின்புற வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை சாமி தரிசனத்திற்காக அனுமதித்த கேரள அரசை கண்டித்து, சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அப்போது சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் பேசும்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆகம விதிகளை கடைபிடித்து சபரிமலை அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டும், கேரள அரசின் ஆதரவோடு அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அய்யப்பன் கோவிலில் 2 பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உருவப் படத்தை எரித்தனர்.
02. சபரிமலையில் பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்த சம்வத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உட்பட 8 இடங்களில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனில் கொடும்பாவியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று ஈத்தாமொழி, சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களை வெட்டி சாய்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
03. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்து மக்களுக்கு விரோதமாகவும், சபரிமலை புனிதத்தை கொடுக்கும் வகையில் கேரளா அரசு செயல்பட்டு வருவதாக கூறி பாஜக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கேரள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
04. சென்னை வேளச்சேரி அடுத்த பள்ளிகரனையில் இந்து முன்னனி சார்பில் சபரி மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செய்து வரும் கேரள அரசை கண்டித்து நடைப்பெற்ற ஆர்பாட்டத்திற்க்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கேரள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், மாவட்ட பொது செயலாளர் பாண்டியன் , மாவட்ட துனை தலைவர் பத்துவச்சலம் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராகவேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com