Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » சபரிமலையில் வன்முறையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்.முயற்சிக்கிறது!

சபரிமலையில் வன்முறையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்.முயற்சிக்கிறது!

pinarayi vijayan-ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்கள் சபரிமலையில் வன்முறையை உருவாக்கி, அதன் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை அழிக்க முயற்சி செய்வதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.சபரிமலை அடிவாரத்தில் நேற்று நிகழ்ந்த மோதல் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு சபரிமலைக்கு உண்டு என்றும், எல்லாவிதமான நம்பிக்கை கொண்டவர்களையும் அது அனுமதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை சகித்துக் கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ்-சும், அதன் பரிவார் அமைப்புகளும், சபரிமலையின் தனித்தன்மையை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள அவர், ஐயப்பனின் கூட்டாளியாக இருந்த முஸ்லிமான வாவரோடு தொடர்புடைய நம்பிக்கைகளை அழிக்க ஆர்.எஸ்.எஸ். இதற்கு முன்னர் பலமுறை முயன்றிருப்பதாகவும் பினராயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com