Friday , 16 November 2018
Home » இந்தியா » சந்திரபாபு நாயுடுவுக்கு பிடியாணை! மகாராஷ்டிர உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சந்திரபாபு நாயுடுவுக்கு பிடியாணை! மகாராஷ்டிர உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1மகாராஷ்டிராவில் தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மகாராஷ்ர உயர்நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்டெட் என்ற இடத்தில் பப்ளி திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டு அம்மாநில அரசு அணை ஒன்றினைக் கட்டியது. இந்த திட்டத்தினால் ஆந்திராவுக்கு பாதிப்பு என்று கூறி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் அணைக்கான கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தவும், அணையை முற்றுகையிடப் போவதாகவும் அப்போது அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் 144 தடை உத்தரவை மகாராஷ்டிர அரசு பிறப்பித்திருந்தது. ஆனாலும் தடையை மீறி சந்திரபாபு நாயுடு நான்டெட் பகுதிக்குள் நுழைய முயன்றார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்களும், 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு தர்மபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் தர்மபாத் நீதிமன்ற நீதிபதி கஜ்பாய், தற்போது ஆந்திர முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com