Friday , 19 October 2018
Home » தமிழ்நாடு » சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும்-மு.க. ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும்-மு.க. ஸ்டாலின்

MK-Stalinசட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்று சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை கண்டித்து தமிழகம் முழுவது திமுக கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மு.க. ஸ்டாலின் பேசும் போது, ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி எதற்கும் பயனற்றதாக உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆகையால் எடப்பாடி அரசை தூக்கி ஏறிய தமிழ்நாட்டு மக்கள் தயாராக உள்ளார்கள் என்று தெரிவித்தார். ஊழலின் கதாநாயகன் முதலவர் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார். மேலும், சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்த ஸ்டாலின், தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்றும் வரை திமுக போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே திமுக கட்சி சார்பில் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி தலைமையிலான நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் சுமார் 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com