Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சகோதரியைக் காதல் திருமணம் செய்தவரின் தந்தையை கொலை செய்த அண்ணன். | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திண்டுக்கல் » சகோதரியைக் காதல் திருமணம் செய்தவரின் தந்தையை கொலை செய்த அண்ணன்.

சகோதரியைக் காதல் திருமணம் செய்தவரின் தந்தையை கொலை செய்த அண்ணன்.

1 (315)திண்டுக்கல்லில் தனது சகோதரியைக் காதல் திருமணம் செய்தவரை பழிவாங்குவதற்காக, அவரது தந்தையின் தலையை துண்டித்து படுகொலை செய்த இளைஞர் தனது கூட்டாளிகள் இருவருடன் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

திண்டுக்கல் ஓடையூரைச் சேர்ந்தவர் க. கிருஷ்ணமூர்த்தி (49). பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் என்ஜிஓ காலனி உழவர் சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற கிருஷ்ணமூர்த்தியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பியோடி விட்டனர்.

இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், செல்வம் (28), க. குமார் (26), பா. கார்த்திக் (32) ஆகிய 3 பேரும் ஒட்டன்சத்திரம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். மூன்று பேரையும் இம்மாதம் 11 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பாபுலால் உத்தரவிட்டார். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com