Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின்போது, மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » கோயம்புத்தூர் » கோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின்போது, மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி!

கோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின்போது, மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி!

vlcsnap-2018-07-13-11h54m53s859கோவை தனியார் கல்லூரியில் என்.என்.எஸ் பயிற்சியின் போது தவறி விழுந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் என்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் ஆறுமுகம், கல்லூரியின் 3-வது மாடி விளிம்பில் நின்று கொண்டு, கீழே குதிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சில மாணவிகள் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கீழே மாணவர்கள் பிடித்திருந்த வலையில் குதித்தனர். அவர்களைத் தொடர்ந்து, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவியான லோகேஸ்வரி குதிக்க முன்வந்தார். லோகேஸ்வரி இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தயாராகும் முன்பே, பயிற்சியாளர் ஆறுமுகம் கவனக்குறைவாக தள்ளிவிட்டார். ஆனால் குதிக்க தயாராகாத லோகேஸ்வரி, 3-ஆம் மாடியிலிருந்து 2-ஆம் மாடியின் சன்ஷேடில் விழுந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த லோகேஸ்வரியை, முதலில் தொண்டாமுத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆலாந்துறை காவல்துறையினர் பயிற்சியாளர் ஆறுமுகத்தைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com