Monday , 23 October 2017
Home » முக்கிய செய்திகள்: » கோலி விஷயத்தில் கவனமாக இருப்பேன் …

கோலி விஷயத்தில் கவனமாக இருப்பேன் …

26kohliகடந்த டெஸ்ட் தொடரைப்போல கோலி விஷயத்தில் மீண்டும் முட்டாள் தனம் செய்ய விருப்பம் இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

 இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்க சென்னை வந்துள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேசுகையில், கடந்த முறை கோலி விஷயத்தில் செய்த தவறை நிச்சயம் திருத்திக்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில்,’கடந்த முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்ற போது, கோலியுடனான மோதல்களை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் அவரை சும்மா விட்டாலே விரைவாக அவுட்டாகி விடுவார். ஆக்ரோஷம் இல்லாமல் அமைதி காப்பதே இம்முறை கோலி விஷயத்தில் எங்கள் திட்டம். இதை வெற்றி கரமாக செய்தாலே இத்தொடரில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்.’ என்றார்.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com