Monday , 23 October 2017
Home » இந்தியா » கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு…

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு…

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று குஜராத் மாநிலம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் 2ம் தேதி அயோத்தியில் இருந்து வந்த சபரமதி விரைவு ரயிலுக்கு கோத்ரா ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இதில் ரயிலின் எஸ் 6 பெட்டி  எரிந்து அதில் இருந்த 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது.குற்றவாளிகளில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

train-fire_37cfb7e4-fd80-11e6-a3af-7fa15638f741போதிய சாட்சிகள் இல்லை என்று கூறி  குற்றம் சட்டப்பட்டிருந்த 63 பேர் விடுவிக்கப்பட்டனர்.குற்றவாளிகள் சார்பிலும், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இது தொடர்பான பிரதி வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் தீர்ப்பை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com