Friday , 16 November 2018
Home » மாவட்டம் » திண்டுக்கல் » கொடைக்கானலில் விவசாயிகள் தண்ணீர் கேட்டு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கொடைக்கானலில் விவசாயிகள் தண்ணீர் கேட்டு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

vlcsnap-2018-08-21-10h22m54s578கொடைக்கானலில் விவசாயிகள் தண்ணீர் கேட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான கிளா வரையில் 500-க்கும் மேட்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் உருளைக் கிழங்கு இகேரட் இபூண்டு உள்ளிட்ட பணப் பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர் . அப்பகுதி விவசாயிகளுக்கு குடிநீர் ஆதாரமாக துளுக்கம்பட்டி அணையை கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் ஒரு கோடியே 10-லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது .இந்நிலையில் இக்கிராமத்தில் மற்றொரு சமுதாயத்தினர் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோட்டாட்சியர் முன்னிலையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது . அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதங்கள் முற்றியதால் காவல் துறையினர் வெளியேற்றினர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபப்பு ஏற்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com