Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கொடைக்கானலில், நடுரோட்டில் மாமியாரை வெட்டிக்கொலை செய்த கார் டிரைவர் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திண்டுக்கல் » கொடைக்கானலில், நடுரோட்டில் மாமியாரை வெட்டிக்கொலை செய்த கார் டிரைவர்

கொடைக்கானலில், நடுரோட்டில் மாமியாரை வெட்டிக்கொலை செய்த கார் டிரைவர்

vlcsnap-2015-03-19-09h20m01s108கொடைக்கானலில், நடுரோட்டில் மாமியாரை வெட்டிக்கொலை செய்த கார் டிரைவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி அட்டுவம்பட்டியை சேர்ந்தவர் அன்பு. கொடைக்கானல் பர்ன்சில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஷீலா . இவர்களுடைய மகள் எஸ்தர் கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கார் டிரைவர் அன்பும், எஸ்தரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, முன்றரை வயதில் சவுத்ஜென்னியா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி 2 பேரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், எஸ்தர் பள்ளிக்கூடம் முடிந்ததும் தாயார் ஷீலாவுடன் வீட்டுக்கு செல்வதற்காக பர்ன்சில் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த அன்பு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஷீலாவின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க சென்ற எஸ்தருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்பு, அங்கிருந்து அன்பு தப்பி ஓடிவிட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஷீலா பரிதாபமாக உயிரிழந்தார்.; உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த எஸ்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி மாவட்டம் க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் காவல்துறை ஆய்வாளர் நாகராஜன், சம்பவ இடத்துக்கு வந்து இறந்த ஷீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com