Monday , 20 November 2017
Home » இந்தியா » கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரியை குறைக்க வேண்டும் ; சித்தராமைய்யா…

கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரியை குறைக்க வேண்டும் ; சித்தராமைய்யா…

கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி நீண்ட நாட்களாக கைவினை கலைஞர்கள் போராட்டம் நட்தி வருகின்றனர். இந்த சூழலில் காந்திய வாதியும், நாடக கலைஞருமான பிரசன்னா, கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த 7 நாட்களுக்கும் மேலாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். இதனால் கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பிரசன்னாவின் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

siddaramaiah1இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், அடுத்து நடைபெற விருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். கைவினைப் பொருட்களின் மீதான வரி காரணமாக கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com