Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விழாவில் பங்கேற்றோர் ஹெச். ராஜா!

கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விழாவில் பங்கேற்றோர் ஹெச். ராஜா!

h rajaஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். உயர்நீதிமன்றத்தை ஹெச். ராஜா இழிவாகப் பேசியதாக, திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருமயம், பொன்னமராவதி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் ஞாயிறன்று அமைக்கப்பட்டன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார். பொதுமேடையில் மக்கள் முன்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் ஒருவரை தனிப்படை வைத்து தேடி வரும் ஒரே காவல்துறை தமிழக காவல்துறைதான் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் 4 வாரங்களில் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தான் காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com