Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு » கேரள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67-ஆக உயர்வு!

கேரள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67-ஆக உயர்வு!

Floodகேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கேரளாவின் 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் பெரும் மழை வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. இடுக்கி மற்றும் முல்லைப்பெரியாறு அணை உள்பட மொத்தம் 33 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் படகுகள் மூலம் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள வந்தனமேடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்காலிகமாக கொச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் பினராய் விஜயன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், முல்லைப்பெரியாறு அணையை 139 அடியாக வைத்திருக்க கூடுதலாக தண்ணீரைத் திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்று முல்லைப்பெரியாறுஅணை நேற்று திறந்துவிடப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com