Monday , 17 December 2018
Home » இந்தியா » கேரள மாநிலத்தில் பெய்து வரும், கனமழையால் 26 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலத்தில் பெய்து வரும், கனமழையால் 26 பேர் உயிரிழப்பு!

Kerla rainகேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடுக்கி, மலப்புரம், கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியதுடன், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் கேரள மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கேரளாவுக்கு விரைந்துள்ளனர் . வயநாடு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கடற்படை சார்பில் 4 குழுக்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com