Monday , 23 October 2017
Home » முக்கிய செய்திகள்: » கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ; பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் …

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ; பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் …

M_Id_409276_PV_Sindhuகொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார். ஜப்பான் வீராங்கனை ஓகுகாராவை 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். வெற்றி மூலம் உலக சாம்பியன்ஷிப் தோல்விக்கு பி.வி.சிந்து பழி தீர்த்துக்கொண்டார். கொரிய ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அரை இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோவுடன் (7வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து, முதல் செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பிங்ஜியாவோ 21-17 என வென்று பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இதில் பதற்றமின்றி உறுதியுடன் விளையாடிய சிந்து 21-10, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனை நஸோமி ஓகுஹரா 21-17, 21-18 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை அகானே யாமகுச்சியை (2வது ரேங்க்) வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் சிந்து – ஓகுஹரா மோதின. இந்த போட்டியில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஓகுகாராவை 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com