Monday , 23 October 2017
Home » மாவட்டம் » கிருஷ்ணகிரி » கெலவரப்பள்ளி அணையில் பொங்கும் நுரை ; அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரம்…

கெலவரப்பள்ளி அணையில் பொங்கும் நுரை ; அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து, வெளியேறிய நீரில் ஏற்பட்ட பஞ்சு குவியல் போன்ற நுரையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

HOSUR-KELAVARAPALLI-DAM-CANகர்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியான நந்திமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 4000 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அணையிலிருந்து வெளியேறிய நீரில், பஞ்சுக் குவியல் போன்ற நுரை பொங்கி, நீர் வெளியேறும் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. பனிபடர்ந்த பிரதேசம் போல சுமார் 30 அடி உயரம் வரை தேங்கியுள்ள நுரையால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.இந்நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் நீரில் கலந்த நுரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com