Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
குற்றாலத்தில் பராமரிப்பின்றி காணப்படும் அரசு தங்கும் விடுதிகள் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திருநெல்வேலி » குற்றாலத்தில் பராமரிப்பின்றி காணப்படும் அரசு தங்கும் விடுதிகள்

குற்றாலத்தில் பராமரிப்பின்றி காணப்படும் அரசு தங்கும் விடுதிகள்

vlcsnap-2018-07-24-11h35m37s640நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்து அமைந்துள்ளது குற்றாலம் . இங்கு ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவ காலங்களாகும். இந்த பருவ நிலையில் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, குளிக்க அனுமதியில்லாத செண்பகாதேவி அருவி, தேனருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த பருவ நிலையை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான பருவ நிலை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அடிப்படை தேவையான தங்கும் வசதி முறையாக செய்து தரப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக அரசு சார்பில் தென்காசி சாலை தங்கும் விடுதி, செங்கோட்டை சாலை தங்கும் விடுதி, மல்லிகா விடுதி, ரோஜா விடுதி, அருவி இல்லம், பிரதான அருவி குடில் என 5 தங்கும் விடுதிகளில் 200-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாராமறிப்பின்றி உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தனியார் விடுதிகளையே நாடுகின்றனர். பாழடைந்து கிடக்கும் இந்த விடுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி தனியார் விடுதிகள் அதிக கட்டணத்தை சுற்றுலா பயணிகளிடம் வசூலித்து விடுகின்றனர். இதனால் இங்கு சுற்றுலா வரும் ஏழை பயணிகள் சாலை ஒரங்களிலும் பேரூந்து நிலையங்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் தங்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தங்கும் விடுதிகளை சீரமைத்து விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com