Monday , 25 June 2018
Home » தமிழ்நாடு » குறைவான நீர் இருப்பதால் மேட்டூர் அணையை திறக்க இயலாது

குறைவான நீர் இருப்பதால் மேட்டூர் அணையை திறக்க இயலாது

SA25METTURமேட்டூர் அணையில் குறைவான நீர் இருப்பதால் இந்தாண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க இயலாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட நேரத்தில் அதாவது ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை என தெரிவித்தார். இந்தாண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க மும்முனை மின்சாரம் 12-மணிநேரம் வழங்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர்;, ரூபாய்-22 கோடியில் 500 மோட்டார் பம்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சூரிய சக்தி மூலம் மோட்டார் இயக்கும் விவசாயிகளுக்கு 90-சதவிதம் மானியம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com