நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 19 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டார். இதன்படி பிளாஸ்டிக் தட்டுகள், கிண்ணங்கள், பிளாஸ்டிக் பைகள், ஒரு தடவை உபயோகிக்கும் டம்ளர்கள் தட்டுக்கள் என பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் இதில் அடங்கும். பிளாஸ்டிக் தடையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மீறி அதை விற்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் குன்னூர் பெட் போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் துணி அங்காடி, பல்பொருள் அங்காடியில் குன்னூர் நகராட்சி சுகாதார அதிகாரி ரகுநாதன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கிண்ணங்கள், மேசை விரிப்புகள் மற்றும் டம்ளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 83.700 கிலோ மேல் இருந்ததாக தெரியவந்ததை அடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரூபாய் l,74,500.00 ஒரு லட்சத்து எழுபத்தி நாலாயிரம்ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது.