குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதாகவும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித் துறை சார்பாக கட்டிடங்கள் மற்றும் நீர்வளத்துறை நிலை குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
பொதுப்பணித் துறை சார்பாக கட்டிடங்கள் மற்றும் நீர்வள துறை நிலை குறித்து பேசிய முதலமைச்சர், முன்னதாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் தொடர்பான புத்தகத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நீர் மேலாண்மையை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவாக தெரிவித்த முதலமைச்சர், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதன் விவரங்கள் அதன்மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் முக்கியமாக குடிமராமத்து திட்டம் மக்களிடமும் விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான அத்திக்கடவு – அவிநாசித் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாவும் அவர் கூறினார்.
ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவே இந்த கூட்டம் நடைபெறுவதாகவும் கூறினார்.