Tuesday , 30 November 2021
Home » மாவட்டம் » ஈரோடு » கீழ்பவானி வாய்க்காலில் இன்றிரவு முதல் நீர் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

கீழ்பவானி வாய்க்காலில் இன்றிரவு முதல் நீர் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இன்றிரவு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி சத்தியமங்கலம் அருகே மில்மேடு என்ற இடத்தில் வாய்க்காலின் கரை உடைந்தது.

இதனால் 5 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இன்றிரவு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நீர் கசிகிறதா என கண்காணிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com