Tuesday , 16 October 2018
Home » தமிழ்நாடு » கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்புவதால், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு!

கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்புவதால், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு!

proj_krsகர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை எந்நேரமும் நிரம்பிவிடும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெளுத்து வாங்கும் பருவமழையால், கர்நாடக மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரியின் துணை நதிகளில் ஒன்றான ஹாரங்கியின் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹாரங்கி அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 661 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போன்று ஹேமாவதியில் இருந்து 3 ஆயிரத்து 220 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய இரு அணைகளில் இருந்து வரும் தண்ணீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கே வந்தடைகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 40 ஆயிரம் கனஅடிக்குமேல் தண்ணீர் வருவதால் அணை நிரம்பும் தறுவாயில் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 766 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணை நிரம்பி வழிவதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 47 ஆயிரத்து 250 கன அடி வீதம் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் ஹேமாவதி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் நாளைக்குள் நிரம்பிவிடும் என்பதால், வேறு வழியின்றி உபரி நீர் முழுவதையும் கர்நாடகம் திறக்கும் நிலை உருவாகும். அப்போது காவிரியில் பெருகி வரும் வெள்ளத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com