தமிழகத்துக்கு என ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி மேலும் 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.