Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
காவிரி நீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் சென்று கலப்பது வேதனை அளிக்கிறது-இல.கணேசன் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » காவிரி நீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் சென்று கலப்பது வேதனை அளிக்கிறது-இல.கணேசன்

காவிரி நீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் சென்று கலப்பது வேதனை அளிக்கிறது-இல.கணேசன்

ilaநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ‘ஒரே நாடு, வெள்ளி விழா ஆண்டு’ என்ற பிரசார ஊர்தி பிரசாரத்தை பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பாரத நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் ஆண்டவனின் கருணையால் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வருவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், அந்த தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாவட்ட தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்.பாலு, நகர தலைவர் மோடி.கண்ணன், சங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com