Tuesday , 22 May 2018
Home » சிறப்புச் செய்திகள் » காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

farmers36காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், விவசாயிகளை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசைக்கண்டித்து காவிரிஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்.

காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவை அமைக்க வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி  போராட்டம் நடைபெற்றது.

அப்போது காவிரி ஆற்றின் நடுவே மணலில் தங்களது உடலை புதைத்தபடி, நெற்றியில் நாமமிட்டும், கழுத்தில் மாலையிட்டும் எலும்புக்கூடுகளை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மத்திய அரசானது தமிழகத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருவதுடன், மரபணு மாற்று விதைகளை புகுத்தி இளைஞர்களை மலட்டுத்தன்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com