Tuesday , 30 November 2021
Home » மாவட்டம் » கோயம்புத்தூர் » காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் ஆனைமுடி அருகே காயத்தால் நடக்க முடியாமல் இருந்த ஆண் குட்டி யானை, இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

கடந்த மாதம் 21-ந் தேதியன்று நல்லமுடி பகுதியில் முகாமிட்ட காட்டு யாணை கூட்டத்தில் இருந்த 6 யானைகளில் 4 மட்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றன. ஒரு தாய் யானையும், குட்டி யானையும் தேயிலை தோட்டத்திலேயே தங்கின.

அதை கவனித்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பின்னங்காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் குட்டியானை மிகவும் சோர்வாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து மானாம்பள்ளி வனத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கு வனத்துறையினர் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த குட்டி யானை இன்று பரிதாபமாக இறந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com