Thursday , 16 August 2018
Home » சினிமா » காலா படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல்

காலா படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல்

rajiniரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஜவஹர் என்பவர் காலா படத்தில், தனது மறைந்த தந்தை திரவியத்தின் பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாகவும், உயர் சாதியினரின் ஆதரவை பெறுவதற்காக, தனது தந்தையை மோசமாக சித்தரிப்பதாகவும், இதனால், இந்த நோட்டீஸ் கிடைத்த 36-மணி நேரத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் 101-கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
02. காவிரி பிரச்சினையி;ல் ரஜினிகாந்த் நடித்த காலா படத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜ், நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், காலாபடம் கர்நாடக மாநிலத்தில் திரையிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது, காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து தெரிவி;த்த கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2-பாகம் படத்திற்கும் கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டது. இதுபற்றி கர்நாடக வர்த்தக சபைத் தலைவர் கோவிந்த் சொல்லும் போது, ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த படங்களைத்தவிர மற்ற படங்களை கர்நாடகத்தில் திரையிட எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று திடீரென்று பெங்களுர் சென்ற கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேசிய பின்பும் இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை

Facebook Auto Publish Powered By : XYZScripts.com