Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கார்பைடு கொண்டு பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » கார்பைடு கொண்டு பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

கார்பைடு கொண்டு பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

vlcsnap-2015-05-08-10h10m00s140அருப்புக்கோட்டையில் கார்பைடு கொண்டு பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்களை நகராட்சியினர் பறிமுதல் செய்தனர்.

விருது நகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் மணி தலைமையில் சுகாதார பிரிவினர் நகரில் மாம்பழம் குடோன்களை ஆய்வு செய்தனர்.

விருதுநகர் ரோடு வேலாயுதபுரம் பள்ளி கூட தெருவில் மாம்பழங்கள் விற்பனை செய்யும் பவுன்பாண்டி வீட்டில் சோதனை செய்தனர். அங்கு கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. 5 டன் மாம்பழங்களை நகராட்சியினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஆணையாளர் மணி கூறும் போது கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com