Monday , 23 October 2017
Home » முக்கிய செய்திகள்: » கார்களுக்கான செஸ் வரி உயர்வு…

கார்களுக்கான செஸ் வரி உயர்வு…

0கார்களுக்கான செஸ் வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கார்களுக்கான செஸ் வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நடுத்தர கார்களுக்கு 2 சதவீதமும், பெரிய ரக கார்களுக்கு 5 சதவீதமும், சொகுசு ரக கார்களுக்கு 7 சதவீதமும் செஸ் வரி உயர்த்தப்படுகிறது. சிறிய ரக கார்களுக்கு செஸ் வரி உயர்த்தப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரியில் கார்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இது, அதற்கு முன்பு இருந்த மத்திய மாநில வரிகளை விட குறைவாக இருந்ததால் கார்களின் விலையில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை குறைந்தது. இதையடுத்து, ஆட்டோமொபைல்களுக்கான செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com