
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை சிறப்பு உற்சவம் நடைபெற்றது. அப்போது தென்கலை ஐயங்கார்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தபோது, நீதிமன்ற தடை உள்ளதால், பிரபந்தங்களை பாடக்கூடாது என வடகலை ஐயங்கார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் உருவானது.
தகராறு முற்றியதால் தள்ளுமுள்ளு மற்றும் கைககலப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தாசில்தார் கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் விரைந்து சென்று சமாதானப்படுத்த முயற்சித்தனர்.