Monday , 18 February 2019
Home » இந்தியா » காங்கிரஸ் கட்சியால் பா.ஜ.க.வை ஒரு போதும் வெல்ல முடியாது!

காங்கிரஸ் கட்சியால் பா.ஜ.க.வை ஒரு போதும் வெல்ல முடியாது!

1காங்கிரஸ் கட்சியால் பாஜக கட்சியை ஒருபோதும் வெல்ல முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியில் நம்பிக்கையில்லை என குற்றம் சாட்டினார். மோடிக்கு ஞானம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பதாகக் குறிப்பிட்டார். தமக்கு அந்த ஞானம் இருக்கிறதா இல்லையா என்பதற்காகவா மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என கேள்வி எழுப்பிய பிரதமர், மின்சாரம், நீர், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வைத்துத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் எனக் குறிப்பிட்டார். தமக்கு இந்துயிசம் பற்றிய முழுமையான ஞானம் இருப்பதாக ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை என்றும், ராகுல்காந்தி குடும்பத்தார்தான் அப்படிக் கூறிக்கொள்கிறார்கள் எனவும் மோடி குறிப்பிட்டார். தங்கள் மீது சேற்றை வாரி வீசினால் அதிக இடங்களில் தாமரை மலரும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com