Monday , 23 October 2017
Home » மாவட்டம் » நாமக்கல் » கழுதைக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

கழுதைக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

vlcsnap-2017-05-10-17h08m26s6கழுதைக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இதனை கருத்தில் கொண்ட மோகனூர் பகுதி மக்கள், ஆண், பெண் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
காவிரியாற்றுப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவிவருவதால், நாமக்கல்லை அடுத்துள்ள மோகனூர் பகுதியில் தேவர் மலை உள்ளது. இந்த மலையின் கீழ்பகுதியில் உள்ள கிடாரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் ஒன்றுகூடி, மனிதர்களுக்கு திருமணம் செய்வதைப்போன்று, ஆண், பெண் கழுதைகளுக்கு, திருமணம் செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பல கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று கழுதை திருமணத்திற்கு மொழி காணிக்கை செலுத்தினர். கழுதைக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற ஐதீக திருமண விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com