Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நகர மக்கள் எச்சரிக்கை!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » கிருஷ்ணகிரி » கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நகர மக்கள் எச்சரிக்கை!!

கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நகர மக்கள் எச்சரிக்கை!!

vlcsnap-2018-07-06-12h40m12s117கிருஷ்ணகிரி நகராட்சியில் 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த பல கழிவு நீர் கால்வாய்கள் சரியான முறையில் தூர்வாரப்படாததால், கழிவு நீர் குளம் போல தேங்கி தூர் நாற்றம் வீசுவதால், குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிரித்து வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்குளம் போல தேங்கி உள்ள கழிவு நீரை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனுகள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கழிவு நீர் தேங்கி, தூர் நாற்றம் வீசுகிறது, இதனால் குடியிருக் முடியாத நிலை நீடித்து வருவதால், நகர மக்களுக்கு தொற்றுநோய்கள் வரும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி நகராட்சியில் இறுதிப்பகுதியாக இந்த 33-வது வார்டு இருப்பதால், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. சரிவர குப்பைகளும் அள்ளப்படாமால் தேங்கி, தூர் நாற்றம் வீசுகிறது, இவை மட்டுமன்றி கழிவு கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டு, கடந்த பல மாதங்களாக சாலையில் குளம் போல தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால், உடனடியாக கழிவு நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை என்றால், நகராட்சி அலுவலத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்படுவேம் என்று நகர மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com